இக்னைட் - 2014

பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் இக்னைட் - 2014


திட்டவரைவு போட்டியில் முதலிடம் பிடித்த பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் ப்ரூயிடிக்ஸ் நிறுவன முதன்மைச் செயல்அலுவலர் சு.ராமமூர்த்தி.உடன், கல்லூரி முதல்வர் ரெ.ரங்கராஜன்
 

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டுரை பகிர்வு மற்றும் திட்ட வரைவு போட்டியில் தஞ்சாவூர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான  இக்னைட் - 2014  என்ற  மாநில அளவிலான போட்டியில் கட்டுரை பகிர்வு மற்றும் திட்ட வரைவு போட்டி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ந.ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  ப்ரூயிடிக்ஸ் நிறுவன முதன்மைச் செயல்அலுவலர் சு.ராமமூர்த்தி பரிசு வழங்கி பேசியது: 
பாலிடெக்னிக் மாணவர்கள் பிற மாணவர்களைவிட முதன்மை பெற்றிருந்தாலும் பேச்சாற்றல் மற்றும் மதிப்பெண் பெறுவதில் பின்தங்கியுள்ளனர். மாணவர்கள் தங்களது வாழ்வில் முன்னேற கல்வி மட்டுமின்றி மனோதத்துவம் தெரிந்திருப்பதும் அவசியம்.அதற்கு இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியாக இருக்கும். வெற்றி என்பது நல்ல மனோபாவத்தின் பரிசு.அது வெற்றியும் மகிழ்ச்சியும் கைகோர்த்துக் கொண்டே வரும். தவறு செய்வது தவறல்ல, அந்த தவற்றை உணர்ந்து நாம் அதை சரி செய்ய வேண்டும் என்றார்.

தமிழகத்தில் பல்வேறு மாவடங்களில் இருந்து 61 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 1205 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் மொத்தமாக  149 திட்ட வரைவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும்  253 கட்டுரை பகிர்வுகளில் 172  பகிர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் கைபேசி மூலம் சக்கர நாற்காலியை முடுக்கக்கூடிய  திட்டத்திற்கு முதல்பரிசு வழங்க வழங்கப்பட்டது.  கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் வெப் கேம் அடிப்படையிலான மெய்நிகர் விசைப்பலகை திட்டத்திற்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கான விருது, ஆப்பகூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துச்சாமிக்கு வழங்கப்பட்டது.
Share on Google Plus

About jayakanthan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment